விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை..!!

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருப்பதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் இது தொடர்பில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஏற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

2020 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 2020 டிசம்பர் 16ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலைய தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts