ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை

பிரெக்ஸிற் நாளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஒப்பந்தம் எட்டப்படாமல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற தயாராக இல்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது.

அத்தோடு வீழ்ச்சியைச் சமாளிக்க அடுத்த 15 நாட்களில் ஒரு வலுவான செயல் திட்டம் இருப்பதை உறுதி செய்யுமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தெரிவுக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எல்லை, மீன்பிடி, புதிய வர்த்தகம் மற்றும் பயணத் தடைகள் பற்றிய பல விவரங்கள், ஐரோப்பிய பிடியாணை உத்தரவு உள்ளிட்ட சட்ட அமுலாக்க உடன்பாடுகளில் தொடர்ந்தும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒப்பந்த மாற்றம் காலம் முடிய இன்னும் ஏழு வேலை நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்த தெரிவுக் குழுவின் தலைவர் ஹிலாரி பென், இது குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

அத்தோடு பிரித்தானிய அரசாங்கம் முறையான திட்டமிடல்களை முன்னெடுப்பது அவசியம் எனவும் ஹிலாரி பென் வலியுறுத்தியுள்ளார்.

Related posts