யாழில் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவு- வளிமண்டலவியல் திணைக்களம்..!!

யாழ்.மாவட்டத்தில் 66.4மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்தார்

தற்போதைய காலநிலை தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாடு பூராகவும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலை8 மணியிலிருந்து இன்று காலை 8 மணிவரை 66.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டின் பலபாகங்களில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, கிழக்கு வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு மாகாணம் உட்பட மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ மாகாணம் உட்பட களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பிற்பகல் வேளையில் மழைபெய்யக்கூடும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். எனவே, இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் யாழ்.மாவட்ட மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts