தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 37 பேர் கைது..!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியத் தவறியமை மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறியமை ஆகிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறி செயற்படுபவர்கள் எவராயினும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அஜித் ரோஹண இதற்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேபோன்று அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய  குற்றச்சாட்டில்1,599பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts