அமெரிக்க எரிசக்தித் துறை மீதான சைபர் தாக்குதல்: இதுவரை கருத்துத் தெரிவிக்காத ட்ரம்ப்..!!

அமெரிக்க எரிசக்தித் துறை மீது இணைய ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இது, அமெரிக்க அரசாங்கத்தின் மீதான மோசமான தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதல், சன்பேர்ஸ்ட் (Sunburst Hack) ஊடுருவலால் தாக்கப்பட்டதாக அமெரிக்க எரிசக்தித்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் அணு ஆயுதங்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பு எரிசக்தித் துறையின் திணைக்களத்திற்கு உள்ள நிலையில் ஆயுதக் களஞ்சியத்தின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொஃப்ற் தனது கணினிகளில் தீங்கிழைக்கும் மென்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரஷ்ய அரசாங்கமே இதற்குக் காரணம் என சந்தேகிக்கிக்கப்படுகின்ற நிலையில் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இதேவேளை, சைபர் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

எனினும், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன் இணையப் பாதுகாப்பை தனது நிர்வாகத்தின் கீழ் முன்னுரிமை ஆக்குவதாக உறுதியளித்துள்ளார்.

Related posts