2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் 4 செயற்கைக் கோள்களை ஏவுகிறது இஸ்ரோ..!!

2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பி.எஸ்.எல்.வி. சி-51 ரொக்கெற், நான்கு செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஹரிகோட்டாவில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு, அனுப்பப்படும் செயற்கைக் கோள்களில், பிரேசிலின் அமேசோனியா என்ற செயற்கைகோள் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பிக்சல் என்ற தனியார் நிறுவனம் தயாரித்துள்ள ஆனந்த் என்ற அதிநவீன புவிக் கண்காணிப்பு செயற்கைகோளும் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், விண்வெளித் துறையில் தனியார் துறையினருக்கு மத்திய அரசு அனுமதியளித்த பின்னர் முதன்முறையாக இந்த சிறப்புத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்குள் பிக்சல் தனியார் நிறுவனம் 30 சிறிய ரக புவிக் கண்காணிப்பு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது என இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

Related posts