11 ஓட்டங்கள், 23 நிமிடங்கள், 4 விக்கெட்டுகள்: 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது இந்தியா..!!

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அடிலெய்ட்- ஓவல் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா முதல்நாள் ஆட்டநேர முடிவில், ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இந்த நிலையில் 4 விக்கெட்டுகள் வசமிருக்க இரண்டாவது நாளை தொடர்ந்த இந்தியா, வெறும் 23 நிமிடங்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 11 ஓட்டங்களை பெற்றது. இதனால் இந்தியா அணி 244 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன்போது இந்தியா அணி சார்பில், அதிகப்பட்ச ஓட்டங்களாக விராட் கோஹ்லி 74 ஓட்டங்களையும், அஜிங்கியா ரஹானோ 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலிய அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 4 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நாதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தற்போது தனது முதல் இன்னிங்ஸிற்காக தனது ஆட்டத்தை அவுஸ்ரேலியா அணி தொடரவுள்ளது.

Related posts