பிரித்தானியாவில் நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு சாதனை அளவை தொட்டது..!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு சாதனை அளவை தொட்டது.

இதன்படி, பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 35ஆயிரத்து 383பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 532பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பிரித்தானியாவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 7ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 19இலட்சத்து 48ஆயிரத்து 660பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 66ஆயிரத்து 052பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 340பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related posts