செக் குடியரசில் கொவிட் தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் ஆறு இலட்சத்து இரண்டாயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் செக் குடியரசில், இதுவரை பத்தாயிரத்து 36பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் எட்டாயிரத்து 235பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 48பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 69ஆயிரத்து 719பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 595பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து ஐந்து இலட்சத்து 22ஆயிரத்து 649பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts