கொரோனா அச்சுறுத்தல்: மேலும் 205 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த மேலும் 205 இலங்கையர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய கட்டாரிலிருந்தும் 163பேரும் ஜப்பானிலிருந்து 42பேரும் இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் கட்டுநாயக்க விமானநிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நேற்றைய தினமும், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 42 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்திருந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அவர்களுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts