கனடாவில் ஒரேநாளில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா..!!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 008பேர் பாதிக்கப்பட்டதோடு, 117பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக நான்கு இலட்சத்து 88ஆயிரத்து 638பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13ஆயிரத்து 916பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 76ஆயிரத்து 310பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 676பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், மூன்று இலட்சத்து 98ஆயிரத்து 412பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts