முஸ்லிம்களின் உடல்கள் தகனம்: மாலைதீவின் பதில் கவலையளிக்கிறது – ஐ.நா. நிபுணர்

கொரோனாவினால் உயிரிழந்த இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வது இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் விலக்கிவைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என மத நம்பிக்கைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் அஹ்மெட் சஹீட் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு மாலைதீவின் பதில் ஆழ்ந்த கவலையை அளிக்கின்றது என ஐ.நா நிபுணர் தெரிவித்துள்ளார்.

இந்த வேண்டுகோள் முஸ்லிம் சமூகத்திடமிருந்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வெளியாகவில்லைபோல தோன்றுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் முஸ்லிம் சமூகம் மேலும் ஒதுக்கிவைக்கப்படும் நிலை உருவாகலாம் என குறிப்பிட்டுள்ள அவர், உலக சுகாதார ஸ்தாபனம் தனது வழிகாட்டுதல்களில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் அல்லது தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts