இலங்கையில் மேலும் சில இடங்கள் முடக்கம்….

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மேலும் சில பகுதிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் முடக்கப்படுவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மொனராகலை மாவட்டத்தின் கிராம அலுவலர் பிரிவொன்றும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், அட்டாளைச்சேனை பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும், ஆலையடிவேம்பு பொலிஸ் பிரிவில் மூன்று பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளன என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் அலுபொத கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts