அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை!….

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரவிநாத ஆரியசிங்க அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சர்வ மத பிரார்த்தனையின் பின்னர் தனது கடமைகளை பொறுப்பேற்ற தூதுவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வாசிங்டனில் அமைந்துள்ள இலஙகை தூதரகம் தெரிவித்துள்ளது.

ரவிநாத ஆரியசிங்க இதற்கு முன்னர் பல நாடுகளின் தூதுவராகவும் வௌிவிவகார அமைச்சின் செயலாளராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts