பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!

பிலிப்பைன்ஸின் தென்பகுதியிலுள்ள மின்டோனா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று(புதன்கிழமை) காலை 6.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நில அதிர்வுக்கான தேசிய மையத்தின் தகவலின் படி உள்நாட்டு நேரப்படி காலை 04:52 மணிக்கு இந்த நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் மைண்டானாவோ நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

உயிர்சேதமோ அல்லது பொருள்சேதமோ இதுவரை எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts