சித்ராவின் மரண வழக்கு குறித்து ஹேமந்தின் தந்தை கருத்து..!!

மறைந்த நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் பொலிஸார் யாரையோ காப்பாற்ற முயற்சிப்பதாக ஹேமந்தின் தந்தை குற்றம் சுமத்தியுள்ளார்.

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு ;கணவர் ஹேம்நாத் கைது | Dinamalar Tamil News

நடிகை சித்ராவின் மரண விவகாரம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், இந்த விவகாரம் குறித்த சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹேமந்தின் தந்தை, “ சித்ரா சம்பாதிக்கும் பணத்தை நாங்கள் ஒரு போதும் கேட்டது இல்லை. வரதட்சனையும் கேட்கவில்லை. உங்கள் பெண்ணுக்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதனை செய்தால் போதும் என்றுதான் சித்ராவின் பெற்றோரிடம் கூறி இருந்தோம்.

எனது மகனை பொலிஸார் அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது  என்பதே தெரியவில்லை. சித்ரா தற்கொலை வழக்கில் பொலிஸார் யாரையோ காப்பாற்ற பார்க்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts