எல்.பி.எல். தொடரை கைப்பற்றும் அணிக்கான பரிசுத் தொகை குறித்த அறிவிப்பு வெளியானது..!!

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணியும், காலி கிளாடியேட்டர்ஸ் அணியும் இன்று மோதவுள்ளன.

தொடரின் வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கிண்ணமும், 100,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாவது இடம் பிடித்தவர்களுக்கு 50,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இறுதிப் போட்டியின் சிறந்த வீரருக்கு 2,500 அமெரிக்க டொலர்களும், தொடரின் ஆட்ட நாயகராக தேர்வு செய்யப்படுபவருக்கு 8,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது.

Related posts