அவுஸ்ரேலியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய தடை..?

நிலக்கரி இறக்குமதிக்கு சீனா தடை விதித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை தெளிவுபடுத்துமாறு அவுஸ்ரேலிய அரசாங்கம் கோரியுள்ளது.

சீனாவின் முன்னணி ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவுஸ்ரேலிய வணிகத்துறை அமைச்சர் சைமன் பிர்மிங்காம், நிலக்கரி இறக்குமதிக்கு தடை என வெளியாகும் செய்திகளை தெளிவுபடுத்துமாறு கூறியுள்ளார்.

ஒருவேளை அந்த தகவல் உண்மையாக இருந்தால், அது சர்வதேச வர்த்தக விதி மீறல் எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீதான சர்வதேச விசாரணைக்கு அவுஸ்ரேலியாவும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, அவுஸ்ரேலியா மீது வர்த்தக ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts