அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரம் வெளியானது! தமிழக வீரருக்கு வாய்ப்பு..!!

முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும், டி-20 தொடரிலும் தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.

ஆனால், நடராஜன் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. நடராஜனை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என இந்திய ஜாம்பவன் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கு அடுத்தபடியாக பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

இந்திய பிளேயிங் லெவன்: விராட் கோஹ்லி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, விரிதிமான் சாஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா.

ஷுப்மன் கில், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

Related posts