அர்மீனியா – அஜர்பைஜான் போர் நிறுத்த ஒப்பந்தம் : கைதிகளும் பரிமாற்றம்..!!

அர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளும் அனைத்து போர் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே, ரஷ்யா முன்னிலையில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தை தொடர்ந்தே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக, அஜர்பைஜான் சிறைகளில் இருந்த 44 அர்மீனியர்கள் விடுவிக்கப்பட்டு, ரஷ்ய போர் விமானம் மூலம் அர்மீனியா வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அதே விமானத்தில், அர்மீனியர்களால் கைது செய்யப்பட்ட 12 அஜர்பைஜான் நாட்டினர் தாயகம் திரும்பியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts