பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைச் ரகசியமாக சந்திக்க சட்டமா அதிபர்- டப்புலா டி லிவேரா இணக்கம் வெளியிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா சார்பாக சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
துணை மன்றாடியார் நாயகம் சுசந்தா பாலபட்டபெந்தி நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டபோது, ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளை சந்திக்க சட்டமா அதிபர் அனுமதி அளிப்பார் என தெரிவித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை சந்திப்பதற்கு கடந்த செப்டம்பர் முதல் சட்டத்தரணிகளுக்கு மறுப்பு வெளியிடப்பட்ட்டு வந்தது. இதனையடுத்தே மேன் முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.