நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது..!!

நடிகை சித்ராவின் மரண விவகாரம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்.டி.ஓ விசாரணைகளை மேற்கொள்ள இருந்த நிலையில், அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை பொலிஸார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை  சித்ராவின் மரண வழக்கு குறித்து ஆர்டிஓவின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு அவரது குடும்பத்தினர் நேற்று ஆஜராகியுள்ளனர்.

சித்ராவின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts