சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் காணொளி மூலம் பேசுவதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு அடிப்படையில் ஸ்கைப்பைப் பயன்படுத்தி பேசுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை அங்குனுகொலபெலெச சிறைச்சாலைகளில் விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.