ரஜினிகாந்த் தேர்தல் ஆணையகத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்துள்ளதாக தகவல்..!!

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்மாத இறுதியில் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகத் நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 234 தொகுதிகளுக்கும்…

மேலும்

UPDATE விபத்துக்குள்ளான விமானத்தை செலுத்திய விமானியும் உயிரிழப்பு..!!

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட இலங்கை விமானப் படையின் PT6 வகை பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கந்தளாய், ஜனரஞ்சன குளத்திற்கு அருகில் குறித்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. மேலும் குறித்த விமானத்தில் பயிற்சியை மேற்கொண்ட விமானியும் உயிரிழந்துள்ளதாகவும் விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை சீனக்குடாவிலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை புறப்பட்ட இலங்கை…

மேலும்

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை ரகசியமாக சந்திக்க சட்டமா அதிபர் இணக்கம்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைச் ரகசியமாக சந்திக்க சட்டமா அதிபர்- டப்புலா டி லிவேரா இணக்கம் வெளியிட்டுள்ளார். ஹிஸ்புல்லா சார்பாக சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துணை மன்றாடியார் நாயகம் சுசந்தா பாலபட்டபெந்தி நேற்று…

மேலும்

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை விபரம் அறிவிப்பு..!!

அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03 ஆம் திகதியுடன் முடிவடையும்.

மேலும்

மக்களின் நடவடிக்கைக்கு அமையவே நாட்டை முடக்குவது தொடர்பில் தீர்மானம்! இராணுவ தளபதி..!!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவில் வீதிகளில் இறங்கிச் செயற்பட்டால் நாட்டை முடக்க நேரிடும் என கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் இந்த மாதத்திலும் இருக்கக்கூடும். அடுத்த மாதமளவில் அதனை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியும். கொரோனா பரவிய ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது…

மேலும்

திருகோணமலையில் பறந்து கொண்டிருந்த பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிப்பு..!!

திருகோணமலை – சீனன்குடா விமானப்படைத்தளத்தில் இருந்து விமானியொருவருடன் பயணித்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது PT 6 என்ற பயிற்சி விமானத்துடனான தொடர்பே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், கந்தளாய் – சூரியபுர பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும்

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்..!!

நாட்டில் குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் வாழும் மக்களுக்காக 7500 வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். வீடு அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இந்த விடயத்தை…

மேலும்

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது..!!

நடிகை சித்ராவின் மரண விவகாரம் தொடர்பில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்.டி.ஓ விசாரணைகளை மேற்கொள்ள இருந்த நிலையில், அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை பொலிஸார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேவேளை  சித்ராவின் மரண வழக்கு…

மேலும்

பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட்: கொலின் டி கிராண்ட்ஹோம் விலகல்- காத்திருப்பு பட்டியலில் வில்லியம்சன்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சகலதுறை வீரரான கொலின் டி கிராண்ட்ஹோம் விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. வலது பாதத்தில் ஏற்பட்டுள்ள உபாதைக் காரணமாக இத்தொடரிலிருந்து அவர் விலகியுள்ளதாக தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் விளக்கம் அளித்துள்ளார். ஜனவரி நடுப்பகுதியில் அவர் குணமடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல அணித்தலைவராhன கேன் வில்லியம்சன்…

மேலும்

கைதிகளுடன் SKYPE மூலம் பேச முடியும்..!!

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் காணொளி மூலம் பேசுவதற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவு அடிப்படையில் ஸ்கைப்பைப் பயன்படுத்தி பேசுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன எக்கநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை அங்குனுகொலபெலெச சிறைச்சாலைகளில் விசேட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்