மேலும் 122 கைதிகளுக்கு கொரோனா தொற்று..!!

மேலும் 122 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 3087 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் 103 சிறைச்சாலை அதிகாரிகள் அடங்குவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.

மேலும் புதிதாக அடையாளம் காணப்பட்ட 122 கைதிகளில் 120 ஆண் கைதிகள் என்றும் மற்ற 02 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts