மாந்தை மேற்கில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் கையளிப்பு..!!

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு, குட்நியூஸ் தொண்டு அமைப்பின் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பருப்புக்கடந்தான், கருக்காக்குளம்,  ஆண்டாங்குளம் ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த தொண்டு அமைப்பின் ஊடாக குறித்த பகுதியில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்ப பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான சுய தொழில் நடவடிக்கைகளையும், பயிற்சி நெறிகளையும் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts