அரசியல் கைதிகளின் விடுதலைக்காக விசேட பொறிமுறை – அங்கஜன்..!!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்று ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் அரசியல், சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகள் என்றால் அனைவரும் ஒன்றே. அவர்களின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கதைத்துள்ளோம். அவரும் இந்த விடயம் தொடர்பாக  நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்த பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளனர். இதற்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts