இந்தியாவில் புதிதாக 30,254 பேருக்கு கொரோனா ..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,254 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98,57,029 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால்  ஒரே நாளில் 391 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 33,136 பேர்  குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  இதனூடாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 3,56,546 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 15 கோடியே 37 இலட்சத்து 11 ஆயிரத்து 833 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts