விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 17ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்புற சாலைகளில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாய சங்கங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.  அந்தவகையில் இன்று டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து, மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

எனவேதான்,  விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts