முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்க வேண்டும் – டிலான் பெரேரா

முஸ்லிம் மக்களின் உடல்களை சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய அடக்கம் செய்ய இடமளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் துயரத்தை நான் உணர்கின்றேன். இதனால், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய முஸ்லிம் மக்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமளிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன்.

முஸ்லிம் மக்களின் நம்பிக்கைக்கு அமைய அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெற வேண்டும். கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் வடக்கில் பௌத்த பிக்கு ஒருவரை தகனம் செய்ய முடியாமல் போன சந்தர்ப்பத்தில் உணர்ந்த வேதனையை தற்போது முஸ்லிம் தாய்மார்களும், தந்தைமார்களும் உணர்கின்றனர் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts