மாத இறுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?…

டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அல்லது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் தற்போதைய நிலமையின் அடிப்படையில் எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (12) காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

22 ஆம் திகதிக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதாகவும், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரையில் தனிமைப்படுத்தவோ அல்லது தனிமைப்படுத்தல் ஊரங்கு சட்டத்தை பிறப்பிக்கவோ எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts