கொரோனா நாடு முழுவதும் பரவும் நிலைமை – சமூகத்திற்குள் பெரிய ஆபத்து! அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸ் பரவல் சமூக மட்டத்திற்கு வந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொகுப்பாளர் மருத்துவர் ஹரி்த அளுத்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வீடுகளில் தங்கி இருக்கும் நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக இறக்கும் நிலைமைக்கு அமைய இது உறுதியாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினர் கூறுவது போல் அடையாளம் காணப்படும் அனைத்து நோயாளிகளும் மினுவங்கொடை கொத்தணிக்கு உரியவர்கள் அல்ல.

இந்த நிலைமையில் சமூகத்திற்குள் தற்போது பெரிய ஆபத்து உருவாகியுள்ளது. மேல் மாகாணத்தில் காணப்பட்ட கொரோனா பரவல் ஆபத்து தற்போது நாடு முழுவதும் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலகில் கொரோனா பரவும் நாடு வரிசையில் இலங்கை 95வது இடத்திற்கு வந்துள்ளது

Related posts