இன்று (12) மற்றும் நாளைய தினங்களில் சில ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
பிரதான ரயில் பாதை, கடலோர ரயில் பாதை உள்ளிட்ட அனைத்து ரயில் பாதைகளையும் உள்ளடக்கும் வகையில் ரயில் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் திலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அனைத்து அலுவலக ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்