இந்திய இராணுவத்தின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் ஐவர் உயிரிழப்பு!

காஷ்மீர் எல்லையில் இந்திய இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தின் மான்கோட் பிராந்தியத்தில் உள்ள எல்லையோரக் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

சிறிய ரக பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளால் பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் கிராமத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமது பதில் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் ஐவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.

மேலும், பாகிஸ்தான் இராணுவத்தின் பதுங்கு குழிகளை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts