வீதியில் மயங்கி விழுந்த நபர் – யாரும் கண்டுகொள்ளாத பரிதாபம்..!!

நீர்கொழும்பில் வீதியில் விழுந்து கிடந்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நீர்கொழும்பு மாநகர சபை அம்பியுலன்ஸ் வண்டி சாரதிகள் நிராகரித்துள்ளனர்.

இதன் காரணமாக நோயாளி ஒரு மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வீதியில் கிடந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

நேற்று காலை 9.30 மணியளவில் இந்த நோயாளி வீதியில் விழுந்துள்ள நிலையில் காலை 10.15 மணியளவில் ஊடகவியலாளர்கள் அவ்விடத்திற்கு சென்றுள்ளனர். நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வண்டி மற்றும் கெப் வண்டி ஒன்றும் அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

தாமதிப்பதனால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்பதனால் அந்த நோயாளியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் வினவிய போது, பாதுகாப்பு உடை வழங்காமையினால் தங்களால் அவ்வாறான நோயாளிகளை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாதென அம்பியுலன்ஸ் ஊழியர்கள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரிடம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் நோயாளி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

Related posts