ராஜஸ்தான் மருத்துவமனையில் 9 குழந்தைகள் உயிரிழப்பு!

ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 9 சிசுக்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில அரசு அதிகாரிகள் கூறுகையில், கோட்டா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த 9 சிசுக்கள் உயிரிழந்தன. அந்த சிசுக்கள் பிறந்து 1 முதல் 4 நாட்களே ஆகின்றன எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சிசுக்களின் திடீா் மரணம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்தக் குழந்தைகள் எந்தவித பாதிப்புக்கும் ஆளாகி உயிரிழக்கவில்லை என்றும் இது இயற்கை மரணம்தான் எனவும் மருத்துவமனை கண்காணிப்பாளா் சுரேஷ் துலாரா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் “கோட்டா மருத்துவமனை முதல்வா் மாநில சுகாதாரத் துறை அமைச்சருக்கு அனுப்பிய அறிக்கையில் 3 குழந்தைகள் மருத்துவமனைக்கு வரும்போதே உயிரிழந்துவிட்டதாகவும் சில குழந்தைகள் பிறவி குறைபாடுகள் காரணமாகவும் சில சிசுக்கள் திடீரென உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்துமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ரகு சா்மா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் இதே மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts