யாழில் வெள்ளத்தில் வந்த பாம்பினால் ஏற்பட்ட விபரீதம் – கணவன் உயிரிழப்பு, மனைவி ஆபத்தான நிலையில்..!!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருகினால் வீட்டுக்குள் வந்த பாம்பு தீண்டியமையினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கல்லுண்டாய் பகுதியில் வெள்ள நீருடன் வீட்டிற்கு வந்து மறைந்திருந்த பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவரின் மனைவி இன்னமும் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெள்ளத்தினால் யாழ்ப்பாண மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அன்றைய தினம் இரவு வீட்டில் உறங்க சென்ற போது பாம்பு தீண்டியுள்ளது. முதலில் உறங்க சென்ற கணவரை பாம்பு தீண்டியுள்ளது.

சத்தம் கேட்டு மனைவி செல்லும் போது அவரையும் பாம்பு தீண்டியுள்ளது. உடனடியாக அங்கு வந்த அயலவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் கணவர் உயிரிழந்துள்ளார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Related posts