தென்னிலங்கையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை புறக்கணிக்கும் பொதுமக்கள்..!!

தென்னிலங்கையில் அலுத்கம பண்டாரகம என்ற இடத்தில் பெருமளவான பொதுமக்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த தகவலை பண்டாரகம மேலதிக சுகாதார அலுவலர் வைத்திய கலாநிதி ஸ்ரீமாலி அமரசிங்க தெரிவித்துள்ளார்.

பி.சி.ஆர் மற்றும் ஏன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரதேசம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக மாரவ என்ற பிரதேசத்தில் வசிக்கும் 2 ஆயிரத்து 800 பேர் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்ட 400 பேருக்கு முதற்கட்டமாக பி.சி.ஆர் பரிசோதனைகளும் என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

Related posts