கொரோனாவிற்கு இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து..!!

ஆயுர்வேத மருத்துவர் தம்மிக பண்டாரவால் விநியோகிக்கப்பட்ட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தை பெறுவதில் பீதியடைய வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் கேகாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மருந்து மாதிரியைப் பெற்றனர், இந்த மருந்து சமீபத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வனியராச்சி உட்பட பல அரசு அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது.

இது குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோயியல் மற்றும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ பிள்ளை கருத்து வெளியிடுகையில்,

மருந்து குறித்து அறிவியல் ஆராய்ச்சி செய்ய சுகாதார அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது, அதன் செயல்திறன் தீர்மானிக்கப்படும்.

அனைத்து உள்ளூர் மற்றும் மேற்கத்தேய மருந்துகள் இலங்கையில் விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான மாற்று மருந்தாக ஆராய்ச்சி இன்னும் நடைபெற்று வருவதாகக் கூறிய அமைச்சர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் கொரோனாவை எதிர்த்து வைட்டமின் டி உதவ முடியும் என்று இதுவரை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தம்மிக பண்டாரவின் ஆயுர்வேத மருந்திற்கு இன்னும் அறிவியல் பூர்வமாக ஒப்புதல் கிடைக்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts