அரசாங்க மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு தொற்று நோய் விஞ்ஞான பிரிவு எச்சரிக்கை..!!

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், சிற்றுண்டிச்சாலையில் உணவு பெறும் போது தனித் தனியாக பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நிறுவனங்களில் ஒன்றாக உணவு பெறும் போது உணவின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று ஆரோக்கியமானவருக்கு பரவ கூடும்.

உணவகங்கள் போன்ற இடங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை, மேலும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கை 50ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது கொரோனா தொற்று பரவ காரணமாகிவிடும்.

Related posts