வவுனியாவை சூழ்ந்துள்ள பனி மூட்டம்!

வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிகாலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

ஏ-9 வீதி உட்பட வவுனியாவில் வீதியால் சென்ற வாகனங்கள் காலை 8 மணிவரை ஒளியைப் பாய்சியபடி சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக குளிருடன் கூடிய காலநிலை வவனியாவில் காணப்பட்ட போதிலும் இன்றைய நிலை போன்றதான பனி மூட்டம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts