கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா..!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த வளாகத்தை முழுமையாக தொற்று நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொற்று உறுதியான பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சமயலறையின் நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக இன்று முதல் பிரிதொரு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts