ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய மேலுமொரு குழு நியமனம்..!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணைகணை மேற்கொள்ள மேலுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உள்ளிட்ட மேலும் சிலர் நேற்றையதினம் சட்டமா அதிபரை சந்தித்தனர்.

அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

12 சட்டத்தரணிகள் அடங்கிய குறித்த குழு சட்டமா அதிபரினால்  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts