போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது – சரத் பொன்சேகாவுக்கு மனோ பதில்!

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நானும், எம்பி சரத் பொன்சேகாவும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். ஆகவே மேலே பார்த்து எச்சில் துப்ப நான் விரும்பவில்லை. மேலும், சபையில் தரக்குறைவான சொற்பிரயோகம் செய்யவும் விரும்பவில்லை.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா என் பெயர் குறிப்பிட்டு பேசியுள்ள காரணத்தால் நான் இங்கே பதில் கூற வேண்டியுள்ளது.

உலகிலேயே தலை சிறந்த இராணுவத் தளபதி என்று சொன்ன வாயாலேயே உங்களை கைது செய்து இழுத்து வர சொன்னார்கள்.

Related posts