இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா பிரதமரால் திறந்து வைப்பு..!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பூங்காவானது மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுகுடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லிடி மேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts