இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்கா பிரதமரால் திறந்து வைப்பு..!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி பூங்கா இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பூங்காவானது மன்னார் – தலைமன்னார் பிரதான…

மேலும்

தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண்கள்..!

சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளை பெற்றதாக கூறப்படும் ஆறு பெண்களை புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள் ஆறு பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணியை சேர்ந்த ஆறு பேரைக் சுட்டுக்கொன்ற பொலிஸார்..!

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணியை சேர்ந்த ஆறு பேர், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதலில் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் 4பேர் காயமடைந்துள்ளதாக ஜகார்த்தா பொலிஸ் துறை தலைவர் முகமது ஃபாதில் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் விபரிக்கையில், ‘இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவரும், தீவிரவாத கருத்துகளைப் போதிப்பவருமான ரைசிக்…

மேலும்

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள்..!!

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் 27 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்களில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற் சங்கத்தினரும் இன்று போராட்டம் நடத்தினர். 10-க்கும் மேற்பட்ட…

மேலும்

காலி கல்வி வலையத்தில் 26 பாடசாலைகளுக்கு 11 வரை விடுமுறை..!!

COVID-19 தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து காலி கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் திறக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தென் மாகாண கல்வி பணிப்பாளர் தெரிவித்தார். கொவிட் 19 தொற்று நிலைமையினை கருத்திற்…

மேலும்

அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்த போது அதை எதிர்த்தேன்! சரத் பொன்சேகா

2009 ஜனவரியில் அரசாங்கம் திடீரென அறிவித்த யுத்த நிறுத்தத்தினால் 300 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என முன்னாள் இராணுவதளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். 2009 ஜனவரி 30ம் திகதியும் பெப்ரவரி முதலாம் திகதியும் அப்போதைய அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை அறிவித்தது. நான் இதனை எதிர்த்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும்…

மேலும்

இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரை இன்று சந்தித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத மீன்பிடி தொடர்பான பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையில் தற்போது ஏற்பட்டுள்ள புரிதல்களுக்கு…

மேலும்

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளது – சரத் பொன்சேகாவுக்கு மனோ பதில்!

போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூற அனைவருக்கும் உரிமையுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத்பொன் சேகாவுக்கு, மனோ கணேசன் சபையில் பதிலளித்தார். நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நானும், எம்பி சரத் பொன்சேகாவும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். ஆகவே மேலே பார்த்து எச்சில் துப்ப நான்…

மேலும்

இந்தியாவால் முக்கியமாகத் தேடப்படும் தீவிரவாதத் தலைவர்கள் சீனாவில் பயிற்சி – இந்தியா தகவல்

இந்தியாவால் அதிகம் தேடப்படும் நாகா பழங்குடியின தீவிரவாதத் தலைவர்கள் மூவர் உள்ளிட்ட நான்கு தீவிரவாதத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்றுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயிற்சிக்காகவும், ஆயுத உதவிக்காகவுமே இவ்வாறு சீனாவுக்கு கடந்த ஒக்டோபரில் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின், குன்மிங் பகுதிக்கு குறித்த நான்கு தீவிரவாதத் தலைவர்களும் சென்றதாகவும், சீன இராணுவ அதிகாரிகளையும், இரு தரப்புக்கும் மத்தியஸ்தராகச்…

மேலும்

‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயற்றிட்டத்தை செயற்படுத்த பிரதமர் ஆலோசனை

‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயற்றிட்டத்தை எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிதி அமைச்சின் ஆலோசனை செயற்குழு கூட்டத்திலேயே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். கிராமிய மற்றும் அரை நகர்ப்புற பிரதேசங்களில் காணப்படும் உண்மையான தேவைகளை கண்டறிந்து குறித்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு…

மேலும்