28 அடி 9 அங்குலத்தை எட்டிய இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம்..!!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீரப்பாசனக்குளமான இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் கிளிநொச்சியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் 36 அடி நீர் கொள்ளளவைக் கொண்ட குளத்தின் நீர்மட்டமானது இன்று காலை 28 அடி 9 அங்குலத்தை எட்டியுள்ளது.

மாங்குளத்தில் கடந்த பன்னிரண்டு மணித்தியாலயத்தில் 87 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் மேலும் குளத்தின் நீர்மட்டம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts