டோனி போன்று வேகம் இல்லை! தவான் ஸ்டம்பிங்கை மிஸ் செய்த பின் வேட் பேசிய வீடியோ காட்சி..!!

அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், டோனி அளவிற்கு ஸ்டம்பிங் வேகம் இல்லையோ என்று தவானிடம் பேசிய வீடியோ காட்சி இப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உலகக்கோப்பை தொடருக்கு பின், எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடமால, டோனி திடீரென்று ஐபிஎல் தொடருக்கு முன் ஓய்வை அறிவித்தார்.

அவர் ஓய்வை அறிவித்தாலும், அவருடைய சாதனைகள் எப்போதும் பேசப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக அவர் செய்யும் மின்னல் வேக ஸ்டம்பிங்.

அந்த வகையில், நேற்றைய இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், தவானை, விக்கெட் கீப்பரும், நேற்றைய போட்டியின் அவுஸ்திரேலியா அணிக்கான கேப்டனுமான மேத்யூவேட், ஸ்டம்பிங் செய்தார்.

Related posts