சிறைச்சாலை கொலைகளை தடுத்து நிறுத்துவது அவசியம்! முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து..!!

அரசின் சிறைச்சாலையில் – சிறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கைதிகள் சிறை அதிகாரிகளாலும், விசேட அதிரடிப் படையினராலும் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் என தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

அண்மையில் மஹர சிறைச்சாலையில் நடந்த அசம்பாவிதங்களில் 11 கைதிகள் கொல்லப்பட்டும், 115 கைதிகளும், 2 சிறை அதிகாரிகளும் காயப்படுத்தப்பட்டுமுள்ளனர். அவர்களில் 28 கைதிகள் ஆபத்தான நிலைமையில் உள்ளனர். இந்தச் சம்பவம் எம்மைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வெண்டும் என்று கைதிகள் கோரினர் என்றும், அது மறுக்கப்பட்டதாலேயே அவர்கள் சிறையை விட்டு வெளியேற முயன்றனர் என்றும் கூறப்படுகின்றது.

அப்போது நடந்த குறைந்தபட்ச பலப் பிரயோகத்தில் கொலைகள் நடந்துள்ளன என்று சிறைச்சாலை உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கும்போது, அமைச்சர் விமல் வீரவன்ச, கைதிகள் குழப்பம் விளைவித்தமைக்கு கொரோனா தொற்றுக் காரணம் அல்ல, மனநோய்க்குப் பாவிக்கும் மாத்திரையை உட்கொண்டு வெறிப்பிடித்து வன்முறைகளில் ஈடுபட்டன என்று கூறியுள்ளார். அத்தகைய மாத்திரைகள் யாரால்? ஏன் கொண்டுவரப்பட்டன என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Related posts