கனமழை காரணமாக வவுனிக்குளத்தின் நீர் மட்டத்தின் அளவு உயர்வு..!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக வவுனிக்குளத்தில் நேற்றிரவு 159 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதுடன், வவுனிக்குளத்தின் நீர் மட்டம் 23அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு வவுனிக்குளத்தின் நீர் ம ட்டம் நேற்றையதினம் 20 அடி 9 அங்குலமாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் இன்று காலை 7.30 மணி வரையான காலப்பகுதிக்குள் வவுனிக்குளம் பிரதேசத்தில் 159 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, குளத்தின் நீர் மட்டம் 23 அடி 4 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை ஐயன்கன்குளத்தில் 72 மில்லிமீற்றர் மழையும் மாங்குளம் பகுதியில் 87 மில்லிமீற்றர் மழையும் பாதிவாகியுள்ளதாக இன்று காலை மாவட்ட நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts